உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார்.

இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன் பின்னர், தாயும் சேயும் மேலதிக சிகிச்சைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய நோயாளர் காவு வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

editor

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்

editor

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்