உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம், உச்ச நேரங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) புறப்படுதல் பகுதிக்குள் (Departure Lobby) பார்வையாளர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன்படி, இனி வியாழன் முதல் சனிக்கிழமை வரையிலான நாட்களில், இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை புறப்படுதல் பகுதிக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பயணிகளின் நெரிசலைக் குறைத்து, விமான நிலைய செயல்பாடுகளை இலகுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வருகிறது.

அதிகாரிகள், இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆதரவு

editor

எகிறும் ‘டெங்கு’

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு