உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவருகிறது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

“அஸ்வெசும” 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் செஹான்

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி – திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்

editor