அரசியல்உள்நாடு

கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – தாஹிர் எம்.பி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (11) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், “கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கும்.

அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடம் உள்ளது,” எனக் கூறினார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

-ஊடகப் பிரிவு

Related posts

SLFP உள்ளக பிரச்சினையை தீர்க்க முடியாது- தேர்தல்கள் ஆணையகம்

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

ரணிலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – புபுது ஜாகொட

editor