கடும் மழை பெய்து வருவதால் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தலா 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு சுமார் 240 கன அடி நீர் வெளியேற்றப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.