உள்நாடு

கடும் இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (13) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும்.

இடிமின்னல் காரணமாக ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor