உள்நாடு

கடுமையான மழை – களனி, மகாவலி உட்பட பல முக்கிய ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ நிலைமைகள்!

நாடு முழுவதும் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து, பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளதுடன், எட்டுக்கும் மேற்பட்ட ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ (Major Flood) நிலைமைகள் பதிவாகியுள்ளன.

ஆறுகளில் அபாய நிலை அதன்படி, பின்வரும் நிலையங்களில் பெரிய வெள்ள மட்டங்கள் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (நவம்பர் 28) காலை அறிவித்துள்ளது:

களனி கங்கை (கித்துல்கலை)
மகாவலி கங்கை (பேரதெனியா, நாவலப்பிட்டி)
சீதாவக கங்கை
குருகொட ஓயா
மகா ஓயா
தெதுரு ஓயா
மெனிக் கங்கை

தொடரும் அச்சுறுத்தல் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை தொடர்ந்து பதிவாகி வருவதால், பல ஆறுகளிலும் நீர்மட்டங்கள் மேலும் உயர்ந்து வருகின்றன.

இதனால், ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்கள் மிகவும் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு