வகைப்படுத்தப்படாத

கடுங்குளிருடனான வானிலையால் அவசரநிலை பிரகடனம்

(UTV|COLOMBO)-அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடுங்குளிருடனான வானிலையால், மேற்கு மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலேயே இவ்வாறு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவ சுழல் என கூறப்படும் வரலாறு காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்கியுள்ளன.

ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடுங்குளிருடனான வானிலையால் சிக்காகோ ஆறு, பனிக்கட்டியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடுங்குளிரால், அமெரிக்காவில் சுமார் 2500 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் வௌியே செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விலங்குகள் குளிரினால் இறக்கக்கூடும் என்பதால், செல்லப் பிராணிகளை திறந்தவௌியில் அனுப்ப வேண்டாம் என பீட்டா அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை மைனஸ் 40 பாகை செல்சியஸ் வரை காணப்படும் என அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்?

Premier says he is opposed to capital punishment

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது