உள்நாடு

கடவத்தை துப்பாக்கிச் சூடு: விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள்

(UTV | கொழும்பு) – கடவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்