நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இனைந்து கடலில் நீராடி கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் (உதயகுமார் ஸ்ரீதரன் வயது 17), (ஸ்ரீகாந்த் சரன்ராஜ் வயது 19), (ஸ்ரீகாந்த் அஜித்குமார் வயது 18), (யூசுப் வயது 27) என வென்னப்புவ – போலவத்த பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சதீஸ்குமார்