உள்நாடு

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்று தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக அஸீம் நியமனம்!

editor

வடமத்திய மாகாணத்தில் A/L சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்

editor

OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் – தே.ம.சக்தி அமைப்பாளர் றியாஸ்

editor