சூடான செய்திகள் 1

கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்?

(UTV|COLOMBO)-அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில், அந்த நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்.
கலிஃபோர்னியாவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காவற்தறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் 200க்கும் அதிகமானவர்கள் அந்த விடுதியில் இருந்துள்ளனர்.
இது தொடர்பில் இயன் டேவிட் லோங் என்ற 28 வயதான கடற்படை அதிகாரி ஒருவர் மீது காவற்துறையினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அசாதாரணமாக நடந்துக் கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், காவற்துறை சுகாதார அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர் தமக்கு கடற்படையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வு துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும்

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்