அரசியல்உள்நாடு

கடமைகளைப் பொறுப்பேற்றார் விஜித ஹேரத்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சர் ஹேரத் 2000 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அமைச்சர் ஹேரத் முன்னர் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சராகவும் பணியாற்றியதுடன் அமைச்சர் ஹேரத் களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

editor

ரிஷாதினால் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!