உள்நாடு

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

(UTV | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் அதிகளவு விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

14ஆம் திகதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15ஆம் திகதியான நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

Related posts

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

சலுகைகளுக்கு சோரம்போய் சொந்த தலைமைகளை இழந்துவிடாதீர்கள் – ரிஷாட்

editor

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

editor