உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,083 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,523 ஆக காணப்படுகிறது.

Related posts

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை – சஜித் பிரேமதாச

editor