உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இவர்களின் 186 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 36,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதுவரையான காலப்பகுதியில் 9,201 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த வருடம் முடிவுக்கு வருகிறது : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு