சூடான செய்திகள் 1

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு

(UTVNEWS|COLOMBO) – சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, பாரிய குற்றங்களை இழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் D.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 150 கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான தேவை உள்ளதாகவும் அது குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

பூசா சிறைச்சாலைக்குக்கு மாற்றப்படவுள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது விசேட பாதுகாப்புடன் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக​ பொலிஸ் விசேட பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

மறைந்த இந்திய முன்னாள் பிரமருக்கு இரங்கல் செய்தி-சம்பந்தன்

கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2,000 பொலிஸார் மற்றும் 10 விசேட அதிரடிப்படையினர் கடமையில்