சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட இவர்களை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) உத்தரவிடப்பட்டுள்ளது.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானுக்கு அலைபேசிகள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை வழங்குவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று(12) இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு