உள்நாடுசூடான செய்திகள் 1

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) –

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது .

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன் என லக்ஷ்மன் கிரியெல்லவினால் விடுமுறை முன்மொழியப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் வெளியிட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் நாடு முழுவதும் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டம் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை

ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு