உள்நாடுபிராந்தியம்

கசிப்பு, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இறக்குவானை பிரதேசத்தில் கசிப்பு உட்பட சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (14) இறக்குவானை
ஸ்பிரிங்குட் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு “கசிப்பை ஒழி” என்று கோசமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக, இறக்குவானை தெனியாய பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!

“நித்திரையில் பட்ஜட் உருவாக்கிய ரணில்” மரிக்கார் சாடல்

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு