உள்நாடு

க.பொ.த சா/த பரீட்சை ; அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் – பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மே 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, மே 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 452,979 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 31 பேர் வெளியேற்றம்