உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடை இருட்டுப் பாலத்திற்கு வெளிச்சமூட்டிய உப தவிசாளர் – UTV வெளியிட்ட செய்திக்கு பயன் கிட்டியது

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலத்திற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கையினை உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் மேற்கொண்டார்.

இருள் நிறைந்து காணப்பட்ட குறித்த பாலப் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸின் வழிகாட்டலில் மின் விளக்கு பொருத்தப்பட்டது.

குறித்த பாலம் இருள் நிறைந்து காணப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் (09) UTV செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதனைக் கருத்திற் கொண்டும், பதுரியா நகர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் கேட்டுக் கொண்டதிற்கிணங்கவும் உடனடியாக இந்த வேலை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் தெரிவித்தார்.

மின் விளக்கு பொருத்தும் இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை மேற்கு வட்டாரத்திற்கான உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வினும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு!

editor

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான புதிய விசாரணை தொடங்கும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

வடமேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ?