உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் பாயிஸின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்!

வியாபாரி ஒருவரின் 18 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத் தொகையை ஓட்டாமாவடி பிரதேச சபை ஊழியர் ஒருவர் கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார்.

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வரும் வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைக்கு வந்த நபரொருவர் கடந்த புதன்கிழமை பணத் தொகையை தவற விட்டுள்ளார்.

வாராந்த சந்தை இடம்பெறும் இடத்தை மீளொழுங்கு செய்யும் ஓட்டமாவடி பிரதேச சபையில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஏ.எல்.பாயிஸ் என்பவர் பணத் தொகையை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த முன்மாதிரி மிக்க செயலை மேற்கொண்ட ஊழியருக்கு வியாபாரி உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்

முட்டையின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!