உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி நாவலடியில் பாரிய விபத்து – ஒருவர் மரணம்!

டிப்பர் – உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (19) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் பயணித்த டிப்பர் வண்டியும், உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதில், உழவு இயந்திர சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

பொருளாதார சபை வாராந்தம் கூட்டப்பட வேண்டும்

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு அரசியல் தலையீடுகளும் காரணம் – பிரதமர் ஹரிணி

editor