பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ‘பஸ்தேவா’ என்ற நபரை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் இருந்த ‘பஸ்தேவா’, நேற்று (07) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தகவை கொலை செய்வதற்காக மகரகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கி வழங்கிமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர், தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் நெருங்கிய உதவியாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
