விளையாட்டு

ஒலிம்பிக்கில் சீனாவுடன் முட்டும் அமெரிக்கா

(UTV |  டோக்கியோ) – டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா 24 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் தங்கப்பதக்கங்களை குவித்து வருகின்றன.

சீனா 24 தங்கம், 14, வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 20 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

போட்டியை நடத்தும் ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 14 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யா 12 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 10 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளது.

Related posts

கிடைக்கப்பெற்றுள்ள தண்டனை புள்ளியுடன் நிரோஷன் திக்கவெல்ல அபாய நிலையில்

இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!