உள்நாடுபிராந்தியம்

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை – சம்மாந்துறை பிரதேச சபை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் சத்தமூட்டலால் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 2025.09.04 முதல் 2025.09.23 வரை யான காலப்பகுதியில் 11 ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இவ்விடயம் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதோடு அனைத்து வியாபாரிகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

editor

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”