உள்நாடு

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – மேலும் 40 டொன் மருத்துவ ஒட்சிசன் வாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன்,குறித்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 100 டொன் ஒட்சிசன் வாயுவுடன் இந்தியாவின் சக்தி கப்பல் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பூட்டு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு