சூடான செய்திகள் 1

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

(UTV|COLOMBO) நேற்று ஆரம்பமான இந்தப்பரீட்சை வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் தவிர்த்து எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி வரை நடைபெறும்.

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை தற்போது நடைபெறுகிறது

கணனி மூலம் மாத்திரம் இந்தப் பரீட்சை நடத்தப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதுள்ளதுடன் இலக்கம் 205, தெபானம, பன்னிப்பிட்டிய என்ற முகவரியில் அமைந்துள்ள கொரிய கணனி பயிற்சி மத்திய நிலையத்தில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது.

பரீட்சை இடம்பெறும் தினம், நேரம், பரீட்சை மத்திய நிலையம் என்பன தொடர்பான விபரங்களை பரீட்சார்த்திகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

 

Related posts

மழையுடனான வானிலை…

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.