உள்நாடுவிசேட செய்திகள்

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!

உலகளாவிய பயண சஞ்சிகையான ‘டைம் அவுட்’ இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக இருப்பதால், அதன் இதமான வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் மலைநாட்டுப் பயணங்கள் முதல் புராதன இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாரிகள் வரை, இலங்கை பார்வையாளர்களுக்கு அனைத்தையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக, இலையுதிர் கால நிறங்கள் மற்றும் பருவகால திருவிழாக்களுக்காக துருக்கி மற்றும் மெக்சிகோ இடம்பெற்றுள்ளன.

ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயார்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றிருந்த மற்ற இடங்களாகும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்த இடங்கள் அவற்றின் பருவகால கவர்ச்சி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையை அச்சப்படுத்திய சம்பவம் ; ஒருவரின் நிலை கவலைக்கிடம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

editor

வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!