உள்நாடு

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

(UTV|கொழும்பு)- மட்டக்குளிய-சமிதிபுர பகுதியில் சுமார் 215 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி உதவி பொலிஸ்மா அதிபர் குணதிலக அவர்களின் ஆலோசனையின் கீழ் மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் போதைப்பொருள் வர்த்தகரான வெல்லே சுரங்கவின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 2005ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிச் சென்று வெல்லே சுரங்கவின் குற்ற செயல்களுக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது

நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மக்களிடம் உள்ளது – ஜே.வி.பி

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு

editor