சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு – மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்களை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
