உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப் பொருளுடன் மருதமுனையில் கைதான இளைஞரிடம் விசாரணை முன்னெப்பு!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை வெள்ளிக்கிழமை (23)  இரவு   கல்முனை விசேட அதிரடிப் படையினர்  கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான  மருதமுனை  பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்   ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710  மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது்  

இதனையடுத்து சந்தேக நபர் உட்பட  சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில்   முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

editor

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக நேர்மையுடன் தீர்வு காண ஜனாதிபதி அநுர தயாரா ? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கேள்வி

editor

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி அநுர

editor