உள்நாடுவிளையாட்டு

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து மெந்திஸ்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மெந்திஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்தக் அணியில் கமிந்து 6வது இடத்தில் உள்ளார்.

அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை அதிக துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட கமிந்து, 94.30 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் அணி இதோ…

யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹெரி புரூக், கமிந்து மெந்திஸ், ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), ரவீந்திர ஜடேஜா, பெட் கம்மின்ஸ் (தலைவர்), மெட் ஹென்றி, ஜஸ்பிரித் பும்ரா

Related posts

பிற்பகல் 02 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம்.

editor

இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்

editor