வகைப்படுத்தப்படாத

ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் நோக்கங்களுக்காக இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு முயற்சிப்போருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிசாருக்கு உண்டு என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்காக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டம் அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். நாட்டில் ஐக்கியம் பலப்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை பலவீனமாக்குவதற்கு இடமளிக்க முடியாதென்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க வலியுறுத்தினார்.

இதனை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related posts

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

Light showers expected today

ரொபட் முகாபேயின் 37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது