பண்டாரகம வேவிட்ட குளத்தை சட்டவிரோதமாக நிரப்பிய சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.
குறித்த குளத்தின் சுமார் 8 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட பகுதியை சந்தேக நபர் நிரப்பியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக விவசாய ஆராய்ச்சி அதிகாரி பண்டாரகம பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.