அரசியல்உள்நாடு

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது, ​​அந்தப் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூன் 31 வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

இலங்கையின் Startup Ecosystem-ல் புதிய முன்னேற்றம்!

editor

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு