விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : ஒளிபரப்ப தடை விதித்த தலிபான்

(UTV | ஆப்கானிஸ்தான்) – ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்தபோவதாக அறிவித்த தலீபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்காத தலீபான்களின் செயலுக்கு எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஐபிஎல் மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலீபான்கள் அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Related posts

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

பதவி விலகத் தயார் – லசித்

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி