உள்நாடு

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இலங்கை வந்தடைந்தார்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இன்று மாலை (23) இலங்கை வந்தடைந்தார்.

அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வோல்கர் டர்க், ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை