சூடான செய்திகள் 1

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று(17) நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள ‘ஜனநாயக தேசிய முன்னணி’ குறித்து நாட்டு மக்களுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிக்கும் திகதி இன்றைய சந்திப்பின் போது நிர்ணயிக்கப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம், கபீர் ஹாசீம் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வானிலை….

மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிக்கொள்ளும் கால்பந்தாட்டப்போட்டி இன்று

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்