உள்நாடு

ஐ.தே.க புதிய தலைமைப் பதவி தொடர்பில் நாளை தீர்மானம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நாளையதினம்(12) தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக தீர்மாநித்துள்ளமையை அடுத்து கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை(12) எட்டப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சிக்கான புதிய தலைமைத்துவத்தை நியமித்ததன் பின்னரே, தேசிய பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

உலமா சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் தெரிவு

editor

15 உயிர்களைப் பறித்த எல்ல பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

editor