உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துத் தொகுதி அமைப்பாளர்களும் இன்று(21) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தயார்படுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், பாராளுமன்ற வாரத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

மாகாண மட்டத்தில் CID அலுவலகங்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்