அரசியல்உள்நாடு

ஐ.தே.க, ஐ.ம.ச இணைவு குறித்து ரவி கருணாநாயக்க எம்.பி கடுமையான எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது நன்று.

ஆனால், எவரையும் வெளியேற்றும் நோக்கில் இவ்வாறு இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படக்கூடாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேர்மையான முறையில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம் இந்த இணைப்பை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒருசிலர் விரும்பவில்லை எனவும் அவர்களின் சதிகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் இணைத்து பொதுக் கூட்டணியொன்றை ஏற்படுத்த நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரணிலுக்கு நெருக்கமான ஒருசிலர் முட்டுக்கட்டைகளைப் போட்டமையினால், அதனை முன்னெடுக்க முடியாமல் போனது எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Related posts

ஜனாதிபதி அநுர இன்று இரவு சீனா பயணம்

editor

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு

BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை

editor