விளையாட்டு

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு :20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்று இந்தூரில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது.

143 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் ராகுல் 45 ஓட்டங்களையும், தவான் 32 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, விராட் கோலி 30 ஓட்டங்களுடனும் ரிஷாத் பந்த் ஓர ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Related posts

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – முன்னணி வீரர்கள் ஓய்வு

இங்கிலாந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியனை தனதாக்கியது

IPL 2022 – மார்ச் மாதம் ஆரம்பம்