முச்சக்கர வண்டி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் புதன்கிழமை (22) மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (20) ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த நபர் மயக்கமடைந்த நிலையில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றில் மோதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டமாவடியை பிறப்பிடமாகவும் ஏறாவூர் – மீராகேணி ஆர்.டி.எஸ். வீதி பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 68 வயதுடைய மகுமூது லெப்பை அப்துல் ஹமீட் என்பவர் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
-எச்.எம்.எம்.பர்ஸான்