மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி அஸாம் சாதிக் (நளீமி) என்பவர் இன்று (3) துபாய் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.
ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய அஸாம் சாதிக் நளீமி துபாய் – சார்ஜாவுக்கு தொழில் நிமித்தம் சென்ற போது அங்கு வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-எச்.எம்.எம்.பர்ஸான்