உள்நாடுபிராந்தியம்

ஏறாவூரில் மாதுளம் பழங்களைத் திருடி ஓட்டமாவடியில் விற்பனைக்கு கொண்டு வந்தவர் சிக்கினார்!

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை பெட்டியுடன் சூசகமாக திருடிய நபர் அதனை ஓட்டமாவடியிலுள்ள பழவகைக் கடை ஒன்றில் விற்பனை செய்ய வந்துள்ளார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டதில் திருடன் வசமாக மாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவசரமாக செய்ற்பட்ட வாழைச்சேனை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பல திருட்டுச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

MV Xpress pearl : ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவர் கைது

editor