வகைப்படுத்தப்படாத

ஏறாவூரில் தீ விபத்து

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு- ஏறாவூர்- தாமரைக்கேணி கிராமத்தில் 06.06.2017 பிற்பகல் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பரானது.

வீட்டில் எவரும் இல்லாதநேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதனால் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ விபத்தினால் வீட்டிருந்த              மின்சார உபகரணங்கள் ஆடைகள் மற்றும் பாவனைப்பொருட்கள் அனைத்தும் எரிந்துள்ளதுடன் வாசலில் நடப்பட்டிருந்த பயிர்ச்செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

“Bravest team will win first World Cup Semi-Final” – Kohli

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை