உள்நாடுபிராந்தியம்

ஏறாவூரில் கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (2) செவ்வாய்க்கிழமை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூருக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக சென்ற வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தின் போது கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனத்தில் பயணித்த சாரதியும், நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது

முஜிபுர், காவிந்தவுடன் சட்டத்தரணி எரந்த ஜெனீவாவுக்கு

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை