உலகம்

ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி

(UTV | காங்கோ) –  காங்கோவில் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 33 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் கொரோனா வைரஸ் காரணமாக அண்டை நாடான உகாண்டாவுடனான அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் காங்கோ தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் உகாண்டா சென்றிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக காங்கோவுக்கு திரும்ப முடிவு செய்தனர்.

அதன்படி 40 பேர் உகாண்டாவில் இருந்து காங்கோவுக்கு படகில் புறப்பட்டபோது எதிர்பாராத வகையில் படகு ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 33 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காற்று வீசியதால் படகு ஏரியில் கவிழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத்தில் பரபரப்பு!

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி ஆர்வம் காட்டவில்லை – ரஷ்யா மீது 100% வரி விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல்!

editor

கொலம்பியா விமான விபத்தில் நால்வர் பலி